காய்ச்சல் இருக்கிறதா? என்று கேட்போருக்கு,கஞ்சிக்கி காசு இருக்கிறதா? என கேட்கத் தெரியவில்லையே:-அச.உமர் பாரூக்..

கொடிய கொரோனாவை விறட்ட
ஊரடங்கு நீட்டிப்பதை மட்டுமே செய்கிறது மைய்ய அரசு அது தவிற அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை யே ஏன்?

இங்கே புரட்சியெல்லாம் வெடிக்காது என்ற நம்பிக்கை காரணமோ?

காய்ச்சல் இருக்கிறதா? என்று கேட்போருக்கு
கஞ்சிக்கி காசு இருக்கிறதா? என கேட்கத் தெரியவில்லையே.

வெளியே வரவேண்டாம் என்போருக்கு
பசி வருமே என்ற வருத்தமே இல்லையா?

தொலைக்காட்சியில் இவர் முகம் பார்க்க யாருக்கு ஆசை
வருவதும் வெற்று உத்தரவு போடுவதும் வாடிக்கையாகிப்போனது
இல்லை வேடிக்கையாகிப்போனது.

தேசம் முழுவதையும் வீட்டுக்குள் முடக்கி
நாற்பது நாளை கடந்துவிட்டது
இதுவரை நோயும் குறையவில்லை
நோக்கமும் எட்டவில்லை.

பின் எதற்கு இந்த கடுமையும்,கட்டுப்பாடும்
அரசுகள் என்பது
ஆர்டர்போடுவதற்காகவா?
மக்களை காக்க இல்லையா?
பசி போக்க வழி சொல்லாமல்
சாவுகளை எண்ணுவதற்கா அரசுகள்?

கொரோனாவைவிட கொடியது பசி
என்பதை எத்துனை நிகழ்வுகள் படம்பிடித்துக்காட்டியும்
பாரதப்பிரதமர் இன்னமும் பந்தா குறையமலே பேசிவருகிறார்

இருப்புகளையும்,வரவுகளையும் இறுக்கமாக பிடித்து வைத்துக்கொண்டு
இருப்பதின் பொருள் என்ன?

நோயிக்கு பயந்து அடங்கிக்கிடப்பதை
கட்டுப்பட்டதாக அர்த்தம் கொள்ளல் ஆகாது.

பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு
பொங்கி எழுவற்குள் அரசே
எதையாவது உருப்படியாய் செய்து தொலை.

அச.உமர் பாரூக்