நெல்லையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்-காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

நெல்லையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்-காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

திருநெல்வேலி மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற நடைபயணத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் அவசர அவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும்,வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும், பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்