Home செய்திகள் தென்காசியில் மொபைல் ரீசார்ஜ் கடைகளை திறந்திட அனுமதிக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியரிடம் மொபைல் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை.

தென்காசியில் மொபைல் ரீசார்ஜ் கடைகளை திறந்திட அனுமதிக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியரிடம் மொபைல் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை.

by Askar

தென்காசியில் மொபைல் ரீசார்ஜ் கடைகளை திறந்திட அனுமதிக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியரிடம் மொபைல் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை.

தென்காசியில் மொபைல் ரீசார்ஜ் கடைகளை திறந்திட பரிந்துரைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மொபைல் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தென்காசி மொபைல் சேல்ஸ், அண்ட் சர்வீஸ், ரீசார்ஜ், வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளைத் திறக்க தமிழக அரசிடம் பரிந்துரைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மொபைல் சங்க செயலாளர் சன் மொபைல் ராஜா, பொருளாளர் ஏஜிஎம். கணேசன் ஆகியோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி நகரப்பகுதிகளில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் பல வருடங்களாக நடத்தி வருகிறோம்.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த முழு ஊரடங்கு காரணமாக கடைகளைத் திறக்க முடியாமல் வருமானம் இன்றி தவித்து வருகிறோம், எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு கடைகள் திறப்பது சம்பந்தமாக அரசாணை வெளியிட்டு இருந்தது.

அதில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை கடைகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளதாக அறிகிறோம். தமிழக முதல்வர் தமிழகத்தில் எந்தெந்த கடைகளை திறக்கலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்க இருப்பதாகவும் அறிகிறோம். எனவே தமிழக முதல்வருக்கு தாங்கள் பரிந்துரைக்கும் தொழில் நிறுவனங்களுடன் தென்காசி நகரப்பகுதியில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!