ஊரடங்கு உத்தரவால் வாடும் அகதிகள், நரிக்குறவர்களுக்கு அரசு, தன்னார்வளர்கள் உதவ வேண்டும் SDPI கட்சி கோரிக்கை…

ஊரடங்கு உத்தரவால் வாடும் அகதிகள், நரிக்குறவர்களுக்கு அரசு, தன்னார்வளர்கள் உதவ வேண்டும் SDPI கட்சி கோரிக்கை.

இது தொடர்பாக இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் கூறுகையில், ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்த நிலையில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் சொல்லெண்ணா துயரத்தில் உள்ளனர். குழந்தைகளுக்கு பால் வாங்கு
வதற்கு கூட முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
மரைக்காயர் பட்டினம், மண்டபம் முகாம் இடையே வசிக்கும் நரிக்குறவர் 40 குடும்பத்தினர் தங்கள் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இவர்களின் உணவு போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி SDPI கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. துயரத்தால் வாடும் இம்மக்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்கள்  89408 63337 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.