ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 150க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 150க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்.உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு விவசாயி கோரிக்கை.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இதனால் மம்சாபுரம் பகுதியில் பலத்த காற்று வீசி கனமழை பெய்ததில் மாடசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் 150 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ரஸ்தாளி வாழைப்பழம் வாழைத்தார்,நாட்டு வாழைப்பழம் வழைத்தார்கள் அரை விளைச்சலில் விளைந்த நிலையில் காற்றுக்கு ஒடிந்து மரத்துடன் கீழே விழுந்து சேதமானது.

இதனால் விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்