மே மாதம் சம்பளம் கொடுங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்..

மே மாதம் சம்பளம் கொடுங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்..

பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செந்தில்குமார் கூறியது :-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 26-8-2011 சட்டசபையில் 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ₹5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அறிவிப்பு செய்தார்.

இதற்காக ஆண்டிற்கு அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க ₹99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கினார்.

ஆனால் நியமனம் செய்த பின்னர் மே மாதம் சம்பளம் தருவதில்லை.

நியமன அரசாணையில் 11 மாதத்திற்கு மட்டுமே சம்பளம் என்று குறிப்படாதபோது, கல்வித்துறையில் ஒருமாதம் சம்பளம் பிடித்தம் செய்து வருவது மிகவும் வருந்ததக்கது.

இப்படியே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 8 ஆண்டுகள் முடிந்து விட்டது.

ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் எப்படி அடுத்த மாதம் குடும்பத்தை நடத்துவது.

அதிலும் இந்தமுறை கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் நிலை மிகவும் கவலையுடன் உள்ளது.

இந்த கஷ்டமான நேரத்தில் மே மாதம் சம்பளம் ₹7700 கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த 16549 பேரில், தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களை காப்பாற்ற, இந்தமுறை ஒருமாதம் சம்பளமான ₹7700ஐ மே மாதம் சம்பளத்தை கொடுத்து பேருதவி செய்திட முதல்வர் அவர்கள் ஆணையிட வேண்டும்.

இதற்காக சுமார் 10 கோடி நிதி ஒதுக்கி ஒரு நிவாரணமாக இம்முறை வழங்க எதிர்பார்க்கிறோம்.

இக்கட்டான நேரங்களில் அரசுக்கு துணை நின்றதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முதல்வர் துணைமுதல்வர் பள்ளிக்கல்விஅமைச்சர் ஒருங்கிணைந்து நல்ல முடிவெடுத்து நிதி ஒப்புதல் பெற்று மே மாதம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க ஆணையிட வேண்டுகிறோம்.

சி. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு