நிலக்கோட்டை துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு நிலக்கோட்டை எம்எல்ஏ வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகப் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தனது சொந்த நிதியில் அரிசி மற்றும் காய்கறிகள் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி அதனை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன் , நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , நிலக்கோட்டை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளரும் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா