இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 46 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை சார்பாக திருப்புல்லாணி  ஒன்றியம் கொட்டியகாரன்வலசை பகுதியில் கொரோனா பேரிடர் மேலாண்மை நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது. கொரோனா நோய்கிருமியால் 144 தடை உத்தரவு மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது. இந்த 144 தடை உத்தரவால் குதக்கோட்டை ஊராட்சி   கொட்டியகாரன்வலசை மற்றும் காடுகாவல்காரன்வலசை அம்பலகாரர்தெரு கிராமத்தில் 46 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள்பாதை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு உதவி செய்யப்பட்டது.அதனடிப்படையில் மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு என 46 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கிளாட்வின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார், மக்கள்பாதை தன்னார்வலர்கள் அப்துல் வஹாப், தெளலத்து நிஷா,சேக் சைபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.இறுதியாக அந்த பகுதியின் மக்கள் மக்கள்பாதை  தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..