மதுரை மாநகராட்சி குடிநீர் வினியோகம் செய்யும்பணியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

மதுரை மாநகராட்சி குடிநீர் பணியாளர்களின் சிறப்பான பணிகளை கௌரவிக்கும் வகையில் மாநகராட்சி ஆணையர் விசாகன் சார்பாகவும் நகரபொறியாளர்  அரசு செயற்பொறியாளர் முருகன் அவர்கள் தலைமையில் திருப்பரங்குன்றம் பகுதியில் முயற்சியால்  மதுரை மாநகராட்சி சார்பாக இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில் இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி ஆணையர்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். பொதுமக்கள் தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனா வைரஸை ஒழிக்க முழு ஒத்துழைப்பு தாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்