திருப்பரங்குன்றம் அருகில் டூவிலரில் புகுந்த சாரைப்பாம்பு பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பைக்கரா அழகுசுந்தரம் நகரில் உள்ள ரமேஷ் என்பவரின் டூவிலரில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த ரமேஷ் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வன உயிரின பயிற்சி பெற்ற ஊர்வனம் அமைப்பினரின் உதவியுடன் டூவிலரில் புகுந்த சுமார் 3 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். டூவிலரில் பாம்பு புகுந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்