Home செய்திகள் உதவி ஆய்வாளரின் மனித நேயம் – பாராட்டிய பொதுமக்கள்

உதவி ஆய்வாளரின் மனித நேயம் – பாராட்டிய பொதுமக்கள்

by mohan

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி  தனது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் இறந்துவிடுட்டார். எனவே அங்கு நடைபெறும் ஈமக்காரியங்களில் கலந்த கொள்ள தனது மனைவி ஜோதி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் அனுமதி கேட்டு தெற்குவாசல் காவல் நிலையம் வந்த நிலையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர்  சங்கர்  மாவட்ட ஆட்சியர் தான் அனுமதியளிக்க வேண்டும் என்று கூற அழுதபடியே நீங்களே அனுமதிவாங்கிதாருங்கள் எங்களுக்கு விபரம் தெரியாது என்று கூறினர். எனவே உதவி ஆய்வாளர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள காலையில் சம்பந்தபட்டவர்களை வர சொல்லுங்கள் அனுமதி தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் இன்று இரவே காரியங்கள் நடக்க உள்ளதால் இப்போதே செல்வதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி தம்பதியர் கேட்க மீண்டும் உதவி ஆய்வாளர் ஆட்சியர் அலுவலகம் தொடர்பு கொள்ள அவசரம் என்றால் உங்கள் காவல்நிலையத்திலேயே அனுமதி கடிதம் கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்ல உடனே கடிதம் தயார் செய்யப்பட்டு உதவி ஆய்வாளர் தனது சொந்த காரிலேயே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்து தம்பதியருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைததார். உதவி ஆய்வாளரின் மனித நேயம் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!