3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாதால் சமூக விலகலை விலக்கி விட்டு, பொதுமக்களே கிணற்றை தூர் வாரும் அவலம்..

பாலக்கோடு அருகே பொரத்தூர் காலனியில் 3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாதால் பொதுமக்களே கிணற்றை தூர் வாரும் அவலம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டி அள்ளி பொரத்தூர்  காலனி பகுதியில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கபட்டு வருகிறது. கடந்த 3 வருடமாக இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீர் வற்றி விட்டது அடிப்படை தேவைகளுக்காக 3 கிமீ தூரம் வரை சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்துவரும் அவல நிலை உள்ளது.

தற்போது கொரோனோ தொற்று காரனமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் உள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில்,

ஊராட்சி நிர்வகாம் மூலம்வாரம் ஒருமுறை மட்டுமே ஓகேனக்கல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில்  கடந்த 1 மாதமாக அந்த குடிநீரும் போதிய அளவிற்க்கு வராததால் பல முறை ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை இதையடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்றினைந்து ஊர் பொது கிணற்றை தூர் வார முடிவெடுத்தனர்.

இந்த  பொது கிணறு கடந்த 20 ஆண்டுகளாக தூர் வாரபடாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அதனை தூர்வாரி தரும் படி கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவே ஊர் மக்களே ஒன்று கூடி கிணற்றை தூர் வார முடிவு செய்து கடந்த 3 நாட்களாக தூர் வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஊரில் உள்ள பெண்கள் இன்று குடத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் அதிகாரிகள் வரை யாரும் சம்பவ இடத்திற்க்கு வரவும் இல்லை கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்  இதனால் விரக்தியடைந்த ஊர் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை  ஓட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக கூறியுள்ளனர்.