சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதியில் அரசு வழங்கும் நலத்திட்டம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு..

இராஜபாளையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதியில் அரசு வழங்கும் நலத்திட்டம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே அட்டை மில் முக்கு ரோடு பகுதியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜவர்மன் அவர்கள் நாடோடிகளாக சுற்றக்கூடிய 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் இன்று மே தினம் என்பதால் ஆட்டோ மற்றும் லோடுவேன் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்க எத்தனை பேர் உள்ளனர் என கேட்டறிந்தார்.

அதுசமயம் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் தங்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை. நாங்கள் தற்போது தான் இந்த பகுதிக்கு வந்துள்ளோம். குடும்ப அட்டை இல்லாததால் எங்களுக்கு அரசு வழங்க கூடிய எந்த உதவியும் கிடைக்கவில்லை தற்போது வறுமையில் வாடி வருகிறோம் உதவி செய்ய வேண்டுமென சட்டமன்ற உருப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் .

சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்து தமிழக அரசின் உதவிகள் கிடைக்கும்
என அவர்களிடம் கூறினார். மேலும் இதுபோன்று நிவாரண பொருட்கள் வழங்கும் இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என சட்டமன்ற உருப்பினர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்