இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் சமத்துவபுரம்,கலியநகரி,மச்சூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மக்கள் பாதை சார்பாக நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர்,ஏழை எளிய 21 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் பாதை மாவட்ட நீதி திட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் சரவணன், துரைமுருகன் மற்றும் கலியநகரி ஊராட்சி பொறுப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.