நுாதன முறையில் பகல் கொள்ளையில் ஈடுபடும் தனியாா் கோல்டுலோன் நிதி நிறுவனங்கள்..

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களும் சிறு குறு வணிக நிறுவணங்களும் பொது மக்கள் நலன் கருதியும் சமூக இடைவெளிக்காகவும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில சுய நிதி நிறுவனங்கள் குறிப்பாக முத்தூட்,கொசமட்டம்,மணப்புரம்,இண்டல் மணி போன்ற தங்க நகை கடன் வழங்கும் கேரள நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் வட்டி கட்டுவதற்கும் பொருட்களைத் திருப்பிக் கொள்ளவும் புதிதாக பொருட்களை அடகு வாங்கவும் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.இதனால் சமூக இடைவெளி தகர்க்கப்படுகின்றது. ஒரு சில இடங்களில் இந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டாலும்,பல இடங்களில் இது போன்ற கடைகள் திறந்து வைக்கப்பபட்டுள்ளது.

மேலும் இதில் டிஜிட்டல் லோன் என்கிற பெயரில் தங்களது வட்டியை புதுவிதமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகை தருகிறேன் என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே அடகு வைத்த தொகையை ரிசர்வ் வங்கியின் எந்த அறிவிப்பு இல்லாமலும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ள காலகட்டங்களில் மாறி இருக்கும் வட்டிகள் அனைத்தையும் அதன் முதலுனுடன் சேர்த்து புதிதாக கூடுதலான வட்டிக்கு சொற்பத் தொகை களில் கடன் வழங்கி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இவர்கள் இவ்வாறு செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே இவ்வகையான புது கொள்ளை முயற்சியான கடன்களுக்கு வாடிக்கையாளர்களை இழுக்கும் படி உத்தர விடுகின்றனர்.

இவர்கள் ஏப்ரல் 20க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில் மட்டுமே தொழில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் மே 3 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் மட்டும் தங்கள் நிறுவனத்தை நடத்திக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது?.. அன்றாட பிழைப்பிற்ககே அல்லாடும் பாமரமக்களும், தங்கள் வாழ்வாதாரத்தை முடக்கப்பட்டு இருக்கும் சிறுகுறு வியாபாரிகளுக்கு தொழில் நடத்திக்கொள்ள கிடைக்காத அனுமதி இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..