நிலக்கோட்டையில் 500 குடும்பங்களுக்கு குமரப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி கொரானா நிவாரண உதவி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குமரப்ப செட்டியார் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பாக கொரானா வைரஸ் காய்ச்சல் பரவல் தடுப்பதற்கு ஊரடங்கு இருப்பதால் ஏழை , எளிய மக்களுக்கு உதவும் விதமாக துப்புரவு பணியாளர்கள், கொங்கர்குளம், கோட்டை , ஆகிய பகுதிகளில் கூலி வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி சிப்பம் 500 குடும்பங்களுக்கு பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு தலைமையில் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவரும், பள்ளி இயக்குனருமான சுந்தரம் ஆகியோர்கள் முன்னிலை வைத்தார் . தாசில்தார் யூஜின், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் அண்ணாமலை, நாகராஜன், தி.குமரப்பன், செ.குமரப்பன், சீனிவாசன் . பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..