நிலக்கோட்டை அருகே வீடு வீடாகச் சென்று ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் உதவி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள என்.புதுப்பட்டியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் பழங்குடி மாணவர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் அனைத்து 212 மாணவர்களுக்கும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர் தனது சொந்தப் பணத்தில் வாங்கி தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளுடன் கூடிய பைகளை நிலக்கோட்டை ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியர் பாலாமணி முன்னிலை வகித்தார்.தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஆசிரியர்கள் சமூக பின்பற்றி வீடு வீடாகச் சென்று ஐந்து கிலோ அரிசியும் காய்கறிகளையும் 212 குடும்பத்திற்கு வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்களை வீடுவீடாக வந்து அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கிய கிராமத்தின் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று ஆசிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்கள். பள்ளி ஆசிரியர்களை விட மாணவர்களின் வீட்டிற்கு சென்று அரிசி வழங்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..