கள் இறக்கி வியாபாரம் செய்த ஒருவா் கைது.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இதனை பயன்படுத்தி ஒரு சிலர் பனை மரத்திலிருந்து கள் இறக்கி வியாபாரம் செய்வதாக மதுரை மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கௌசல்யாவுக்கு புகார் வந்தது.இதனையடுத்து கௌசல்யா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் சாமுவேல் போலீசாருடன் அண்ணா நகர் ஜே ஜே நகர் ஜே ஜே நகர் பகுதியில் ரோந்து சென்றார்.அப்போது பனை மரத்திலிருந்து ஒருவர் கள் இறங்குவது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image