Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்.. தொடர்பு எண் அறிவிப்பு… MASA மக்தூமியா சமூக நல அமைப்பு

கீழக்கரை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்.. தொடர்பு எண் அறிவிப்பு… MASA மக்தூமியா சமூக நல அமைப்பு

by ஆசிரியர்

கீழக்கரையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு MASA மக்தூமியா சமூக நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புக்குரியவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் நம் ஊரில் அசாதாரண சூழலை உருவாக்கி உள்ளது அதை கருத்தில் கொண்டு அந்த சம்பவத்தில் கலந்து கொண்டவர்களை அரசாங்கம் தனிமைப்படுத்த சொல்லி உள்ளது ,

இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் இன்று (07/04/2020) மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் சுகாதார துறையினர் வீடு வீடாக கணக்கு எடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள் உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் எத்தனை, 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை, சளி, இருமல், மூச்சு்திணறல், சக்கரைவியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகள் உள்ளதா என்று கணக்கு எடுத்து வருகிறார்கள் அதனுடன் குடும்ப தலைவர் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வருகிறார்கள்,

இந்த சூழலில் மக்களுக்கு ஒரு அய்யம் ஏற்படுகிறது இது NPR, NRC, CAA க்கு இருக்குமோ என்று, இது கொரோனோ கணக்கெடுப்பு மட்டுமே யாரும் இதில் அச்சம் தேவையில்லை இதை கருத்தில் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வரும் சுகாதார துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நம் ஊரை கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாப்போம்.

மேலும் மேற்கூரிய அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் சுகாராத துறை அல்லது எங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் கூடுதல் விபரங்களுக்கு  அகமது முகைதீன் ‭00 91 91508 02604‬ தலைவர், MASA, சீராஜிதீன் ‭00 91 96779 90555, ‬செயலாளர் MASA மற்றும்  மற்றும் MASA வின் உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!