கீழக்கரை நகர் பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு…..

கீழக்கரை சின்னக்கடை தொருவை சேர்ந்த முதியவர் முஹம்மது ஜமால் சென்னையில் கடந்த 2.4.2020 அன்று மரணித்து கீழக்கரையில் 3.4.2020 அன்று உடல் நடுத் தெரு ஜும்மா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு கடந்த 5.4.2020 அன்று கொரோனா தோற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கீழக்கரை சின்னக்கடை தெரு மற்றும் நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு அப்பகுதியை சுகாதாரத்துறை, நகராட்சி துறை, மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று 7.4.2020 கீழக்கரை நகர் வார்டு எண் 4,5 பகுதிகளில்  சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சினைகள் உள்ளதா என்று விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறியதாவது “கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்னும் ஒரு இரு நாளுக்குள் அனைவரும் கீழக்கரையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள வீடுகளிலும் சோதனை செய்து அவர்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று பிரச்சினைகள் இருந்தால் அவர்களை உடனடியாக கண்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது“ என்று  கூறினார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..