மாவட்ட ஆட்சியருக்கு கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை!..

கீழக்கரை மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கும் கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சியில் அதிதீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறேன்.

கீழக்கரை மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளும் இந்த சூழலில் அன்றாட அத்தியாவசிய அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழக்கரையை சுற்றியுள்ள தோட்டங்களில் இருந்து மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்,லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலை முடக்கப்பட்டு பல்வேறு தெரு மக்கள் போதிய குடிநீரின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன.

வீடடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வினியோகம் செய்திட மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்று போர்க்கால அடிப்படையில் உதவிடுமாறு பணிவோடு வேண்டுகிறேன். இவ்வாறு கீழை ஜஹாங்கீர் அரூஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..