உசிலம்பட்டியில் முட்டைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள்  தங்களை பாதுகாத்துகொள்ள முககவசம் அணிய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள இறைச்சிகடைகளில் இறைச்சிகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாலும் இறைச்சிகள் விற்க ஒருசில கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஒரு சில இறைச்சி கடைகளே உசிலம்பட்டியில் உள்ள நிலையில் அங்கு நீண்ட வரிசையில் நிற்க மனமில்லாமல் அசைவ பிரியர்கள் வேறு வழியில்லாமல் முட்டைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு முட்டைகடையில் பொதுமக்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் முட்டைகளை வாங்கிச் சென்றனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு கடை நிர்வாகத்தினர் முட்டைகள் வழங்கவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முட்டை ரூ.4க்கு விற்பனை செய்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்து தற்போது ரூ5 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சலால் ரூ2க்கு விற்கப்பட்ட முட்டை விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால் முட்டை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image