கீழக்கரை மக்களுக்கு திமுக நகர் செயலாளர் அரசு பணிக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்…..

கீழக்கரை மக்களுக்கு திமுக நகர்  செயலாளர்  S.A.H பஷீர் அகமது விடுத்துள்ள அறிக்கையில்: கீழக்கரை சின்னக்கடை தொருவை சேர்ந்த சகோதரர் பீலி ஜமால்  கடந்த 2.4.2020 அன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தார்.  பின்பு அவர் உடல் சொந்த ஊரான கீழக்கரை கொண்டுவரப்பட்டு. நடுத் தெரு ஜும்மா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 5.4.2020 அன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர் இல்லமான சின்னக்கடை தெரு மற்றும் அவரை அடக்கம் செய்யப்பட்ட நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படது. இன்று 7.4.2020 கீழக்கரை நகர் பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று வீட்டில் முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் யாரேனும் உள்ளார்களா என்றும் கணக்கு எடுத்து வருகின்றனர். இந்தக் கணக்கு சுகாதாரத்திற்கு மட்டும்தான் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.

ஆகவே நாம் அனைவரும் இந்த கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கீழக்கரை நகர் பகுதியில் இருக்கும் திமுகவினர் தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்குமாறும். உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’  என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..