ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு

ஊரடங்கு உத்தரவையடுத்து இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு மசூதியில் வெளி நாட்டினர் தங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பட்டணம் காத்தான் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினார். அங்கு இந்தோனேஷியா நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த ஜெய்லானி 40, இவரது மனைவி சித்தி ரொகானா 45, ரமலான் பின் இப்ராஹிம் 47, இவரது மனைவி அமான் ஜகாரியா 50, முகமது நசீர் இப்ராஹிம் 50, இவரது மனைவி கமரியா 55, மரியோனா 45, இவரது மனைவி சுபிஸ்னி 43 ஆகியோர் மதப்பிரசாரத்திற்காக சுற்றுலா விசாவில் மார்ச் 24 ஆம் தேதி இராமநாதபுரம் வந்து இங்கு தங்கியிருந்தது தெரிந்தது. ஊரடங்கு உத்தரவை மீறி இவர்கள் தங்குவதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அலி, அஷரப் அலி, அறக்கட்டளை நிர்வாகி முகமது காசிம் ஆகியோர் இடம் கொடுத்தது தெரிந்தது. கிராம நிர்வாக அலுவலர் செல்வம் புகாரின் அடிப்படையில் இவர்கள் 11 பேர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image