திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சியில் எம்எல்ஏ அரிசி வழங்கினார்.

திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சியில் நேற்று எம்எல்ஏ பவுன்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கினார்.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளைப்பெருமாள்நல்லூர் ஊராட்சியில் இந்துஸ்தான் ஆயில் கார்பரேஷன் என்ற தனியார் கம்பெனி உள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு 144 தடை உத்தரவிட்டு ஊராடங்கு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வேலையின்றியும் போதிய உணவின்றியும் இருந்து வருகின்றனர்.

இதற்கு உதவும் விதமாக மேற்கண்ட தனியார் கம்பெனி அப்பகுதி மக்களுக்கு நிவாரணமாக 400 அரிசிஅரிசியை ஊராட்சியில் உள்ள 844 குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப அட்டைக்கு 10 கிலோ வீதம் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி, கொரோனா வைரஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.அப்போது பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தி ஆனந்தன், ஊராட்சி செயலாளர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image