வீடு வீடாகச்சென்று ஆய்வு

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் தற்போது திருக்களாச்சேரி ஊராட்சி பிலால் நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை மூலம் அறிவிக்குப்பட்டுள்ளது, டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்தவர் என்ற தகவலின்பேரில் சுகாதாரத்துறை மூலம் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துசென்ற நிலையில் கொரானா அறிகுறி இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் வசிக்கும் பகுதிகள் முழுவதும், வட்டார மருந்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், பழனிதாஸ், சக்திவேல் மற்றும் ஆக்கூர், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து செவிலியர்கள், தரங்கம்பாடி தாலுக்கா அங்கன்வாடி பணியாளர் என 40 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து வீடு வீடாகச்சென்று சுகாதார பணிகள், கொரோனா ஆய்வுபணிகள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் பொறையார் முதல் எடுத்துக்கட்டி ஊராட்சி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது, போலிசார் ரோந்து பணியில் ஈடபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர் தொடர்புடையவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..