உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் தன்னார்வ இளைஞர்கள வீதி,வீதியாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீiர் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத்தடுக்க பல்வேறு முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து எனக் கண்டறியப்பட்டு தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமணைகளிலும் பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் தன்னார்வ இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் குழு தங்களது சொந்த செலவில் கபசுர பொடிகள் வாங்கி, அதனை அந்த கிராமத்திற்கே எடுத்துசென்று பொதுமக்களின் முன்னிலையில் சுட சுட குடிநீராக காய்ச்சினர்.

அதனைதொடர்ந்து இருசக்கரவாகனத்தின் மூலம் கபசுர குடிநீரை எடுத்துசென்று பொதுமக்களுக்கு வீடுதேடி இலவசமாக வழங்கினர்.உசிலம்பட்டி கோட்டாச்சியர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறையினர் அனுமதி பெற்ற பின்பே இந்தக் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதாக சௌந்திரபாண்டியன் தெரிவித்தார்.பொதுமக்கள் நலன் கருதி சேவைசெய்துவரும் இந்த இளைஞர்களை அந்த பகுதிமக்கள் பெரிதும் பாராட்டினர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image