மதுரை மாநகரில் ஊரடங்கை மீறியதாக வியாபாரிகள் உள்பட 306 பேர் கைது

மதுரை மாநகரில் ஊரடங்கு தடைச்சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறுவோருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் மாநகர போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து சென்று வந்தனர்.அப்போது கே. புதூர் சிவனாண்டி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராமன் (வயது 21) என்பவர் பிடிபட்டார். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேவையின்றி ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் வெளியில் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அழகர்கோயில் மெயின் ரோடு இளங்கோ (வயது 50), மேல கள்ளந்திரி சந்தானம் (வயது 44), கரும்பாலை ஒலி பக்கர் சித்திக் (வயது 40), எல்லிஸ் நகர் பூக்காரத் தெரு சின்னையா (வயது 33), காமாட்சி (வயது 28), சர்ச் ரோடு மணிமாறன் (வயது 29), நியூ எல்லிஸ் காலனி சர்வோதயா தெரு தினேஷ் (வயது 25), மாப்பாளையம் அன்சாரி நகர் சதீஷ்குமார் (வயது 26), எல்லிஸ் காலனி தினேஷ் (வயது 21), நரிமேடு செக்கடி தெரு கணேசமூர்த்தி (வயது 48), ஸ்ரீராம் நகர் செண்பகப்பூ தெரு ஜவகர் (வயது 54), முதுகுளத்தூர் முனியசாமி மகன் கனக சந்தோஷ் குமார் (வயது 19), ஸ்ரீராம் நகர் வாடாமல்லி தெரு மலையரசு (வயது 31) ஆகிய 13 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் வயது 26 என்பவர் பலசரக்கு கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது முத்துராமலிங்கம் ஊரடங்கு தடை சட்டத்தை மீறும் வகையில் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதேபோல சூர்யா நகர் காஜா முகைதீன் (வயது 47), கற்பக விநாயகர் கோவில் தெரு அப்துல் ரஹீம் (வயது 58), காந்திபுரம் சுரேந்திரன் (வயது 44), சந்தன மாதா கோவில் தெரு சகாயராஜ் (வயது 44), பழனி செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பிரவீன்குமார் (வயது 32) ஆகிய 5 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர் தள்ளுவண்டியில் பழம் வைத்ததாக கைது செய்யப்பட்டார்.

உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்த முருகன் (வயது 51) என்பவர் அந்தப் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது முருகன் சட்டத்தை மீறும் வகையில் தேவை இன்றி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வியாபாரி முருகனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல செல்லூர் பந்தல்குடி பவுன்ராஜ் (வயது 43), திண்டுக்கல் நத்தம் வெள்ளையன் (வயது 44), காந்திபுரம் கணபதி தெரு கமர்தீன் (வயசு 27), காதக்கிணறு பாலமுருகன் (வயது 45) ஆகிய 4 வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு போலீசார் அவர்களை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.கே புதூர் போலீசார் நேற்று மாநகரில் இருந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசீர்வாதம் (வயது 60) என்பவர் பிடிபட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது ஆசீர்வாதம் தேவையின்றி ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் வெளியில் சென்று வந்தது தெரிய வந்தது இதையடுத்து கே புதூர் போலீசார் ஆசீர்வாதத்தை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல சர்வேயர் காலனி, பாண்டியன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டார்.மதுரைமா நகரில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக 310 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 306 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image