இராமநாதபுரத்தில் சமூக விலகல் பின்பற்றாமல் இயங்கிய மீன், இறைச்சி கடைகள்..

நாடு முழுவதும்  கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாத ஊரடங்கு உத்தரவு ஏப்.14 வரை அமலில் உள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது பொதுமக்கள் வாங்கிச் செல்ல நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (05/4/2020) ஞாயிற்றுக்கிழழை என்பதால் இராமநாதபுரத்தை ச் சேர்ந்த அசைவப்பிரியர்கள் டவுன், பாரதி நகர், சின்னக்கடை பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்களில் மக்கள் கூடினர். இப்பகுதிகளில் நுழைவு வாயிலில் போலீசார் தடுப்பு அமைத்து ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் இடைவெளியில் சமூக விலகலை பின்பற்றி வரிசையில் நிற்க அறிவுறுத்தினர். மார்க்கெட்டிற்குள் நுழைந்த அசைவ பிரியர்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடந்த காலங்களைப் போல் முண்டியடித்து மீன்களுக்கு விலை பேரம் பேசினர். மண்டபம், தேவிபட்டினம் பகுதிகளில் இருந்து மட்டும் மீன்கள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு, அசைவ பிரியர்களின் போட்டா போட்டியை தொடர்ந்து மீன்களின் விலையை இரடிப்பாக்கி வியாபாரிகள்  விற்றனர்.

மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்திலும் சமூக விலகலை பின்பற்றாமல் காலை உணவுக்காக வாடிக்கையாளர்கள் முண்டியடித்தனர்,

புனித ரமலான் வாழ்த்துக்கள்..