உசிலம்பட்டியில் ஊரடங்கு நாளில்பாரதிய ஜனதா மோடி கிச்சன் சார்பில்ஆதரவற்றவா்களுக்கு உணவு பார்சல் வழங்கப்பட்டது.

தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு 144தடை உத்தரவு சம்பந்தமாக வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக பணியாற்றும் காவல்துறையினருக்கு, ஆதரவற்றவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமரின் மோடி கிச்சன் வழங்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சின் மருத்துவரணி மாவட்ட தலைவர் விஜயபாண்டியன் தலைமையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிந்துகொண்டு உணவு பார்சல்களை வழங்கினார்.

மேலும் 144தடை உத்தரவால் வேலையிழந்துள்ள கூலிதொழிலாளிகளுக்கும் உணவ பார்சல்களை வழங்கினார். மேலும் மாவட்ட புற நகர் செயலாலர் PTRசொக்கநாதன் உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் முருகன்,ஒன்றிய தலைவர் சின்னசாமி, செல்லம்பட்டி மாவட்ட நிர்வாகி மொக்கராஜ், உசிலம்பட்டி நகர தலைவர் பாண்டியராஜன், உசிலம்பட்டி நகர பொது செயலார் முத்து, ஒன்றிய பொது செயலாலர் குருசாமி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image