தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி…

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி…

தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் மருத்துவமைனையிலேயே தங்கி பணிபுரிபவர். மேலும் மருத்துவரும் ஒன்பது மாத கர்ப்பிணியுமான அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மையில் பிரியாவிடை நிகழ்வுக்குச் சென்றதாக மருத்துவர் தகவல் தெரிவிக்க,அவரோடு தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 8 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடலியில் துறை மருத்துவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தில்லியைச் சேர்ந்த 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் இருவர் சப்தர்ஜங் மருத்துவமனையிலும் ஒருவர் சர்தார் வல்லப பாய் பட்டேல் மருத்துவமனையிலும் பணிபுரிகின்றனர். மேற்குறிப்பிட்ட சப்தர்ஜங் மருத்துவர்களில் ஒருவர், உயிர் வேதியியல் துறையின் முதுகலை மாணவர். இவர் அண்மையில் துபாயிலிருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவருக்கு அவரைப் பார்க்க வந்த நோயாளியிடமிருந்து தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் உள்ள உயர்தர மருத்துவமனைகளில் கூடமருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அவலநிலையை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சில தினங்களுக்கு முன்பு தில்லி மொஹல்லா மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவ தம்பதியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுடைய மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தில்லி மாநில புற்றுநோய் கழகத்தின் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர் அண்மையில்தான் பிரிட்டனில் இருந்து திரும்பியிருந்தார். சர்தார் வல்லப பாய் படேல் மருத்துவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அனைத்திந்திய மருத்துவ அறிவியில் கழக நிர்வாகம், அதன் அதிர்ச்சி மையத்தை கொரோனா நோயாளிகளின் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது. தில்லியில், 51 வெளிநாட்டவர் உட்பட 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் குணமடைந்தனர்;இருவர் உயிரிழந்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..