பாலக்கோடு பேரூராட்சியில் இரவு பகலாக பணி புரியும் தூய்மை காவலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இரவு பகல் பராமல் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாலக்கோடு நகர் முழுவதும் சிறு கடை முதல் பெரிய வணிக வளாகம் மருத்துவமணை , உழவர் சந்தை, தக்காளிமண்டி. இரயில் நிலையம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 18 வார்டுகளில் உள்ள சாக்கடை கால்வாய் , தெரு, வீடு உள்ளிட்ட பகுதிகளில் தீவீரமாக லைசால் கிருமி நாசினி தெளிப்பது பிளீச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை கருதி பாலக்கோடு மண்டல மருந்து வியாபாரிகள் சங்கம் மூலம் 50 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். இத்தொகுப்பில் கையுறை முகக் கவசம் லைசால் கிருமிநாசினி டெட்டால்  சோப்பு வகைகள் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியிருந்த இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தர்மபுரி மாவட்ட மருந்து ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையில் நடைபெற்றது இதில் பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்த்தி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர் பாலக்கோடு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கோபால் பாலக்கோடு மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் துணைத் தலைவர் ரத்தினவேல் செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..