பாலக்கோடு அருகே மகேந்திர மங்கலம் காவல் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

பாலக்கோடு அருகே மகேந்திர மங்கலம் காவல் நிலையம் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றித்திரிந்த முதியவர் ஓசூர் தர்மபுரி நெடுஞ்சாலை ஓரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது அவரை மீட்ட மகேந்திரமங்கலம் போலீசார் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவர் இறந்துவிட்டார். இந்நிலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெரியவர் யார் என்று அடையாளம் தெரியாமல் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக  வழி தவறி வீட்டில் இருந்து வந்து சாலையில் நடமாடிக் கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் யாருக்கேனும் தகவல் தெரியும் பட்சத்தில் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image