144 தடை உத்தரவால் செங்கம் நாடக கலைஞர்கள் வறுமையால் தவிப்பு:-அரசு உரிய உதவிகள் செய்ய கோரிக்கை.. 

144 தடை உத்தரவால் செங்கம் நாடக கலைஞர்கள் வறுமையால் தவிப்பு:-அரசு உரிய உதவிகள் செய்ய கோரிக்கை..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிராமப்புற பகுதிகளான மேல்பெண்ணாத்தூர் இறையூர் மண்மலை பார்சல் குப்பநத்தம் பரமனந்தல் கொட்டாவூர் மக்களை சார்ந்த நாட்டுப்புற நாடக கலைஞர்கள் உள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு ந
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வருவாயின்றி நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கடந்த சில மாதங்களாக போதிய நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வருவாய் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் நாடகக் கலைஞர்கள் குடும்பத்தினர் தற்போது உணவுக்கே கஷ்டப்பட்டு பசியில் வாடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா நோயால் நாட்டுப்புற கலைஞர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

எனவே இவர்களுக்கு வாழ்வாதார இழப்பை ஈடு செய்யும் விதத்திலும் அவர்களுடைய குடும்பங்களுக்கு தமிழக அரசு குறைந்தது 3 மாதங்களாவது நிதி உதவி வழங்க வேண்டும்.

தற்போது நாடக கலைஞர்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது . நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image