அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்ற அண்ணாச்சி கடைக்கு ‘ஆப்பு’ வைத்த வட்டாட்சியர்..

அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்ற அண்ணாச்சி கடைக்கு ‘ஆப்பு’ வைத்த வட்டாட்சியர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம் பாடி கிராமத்தில் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி சீல் வைத்தார்.
தற்போது கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் கடைகளான மளிகை, பால், காய், கனி கடைகள் மட்டும் காலையில் 3 மணி நேரம் இயங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி, வியாபாரிகள் காலை நேரத்தில் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகிறனா்.

இதனிடையே, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படும் கடைகளில் மளிகைப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், மேல்வணக்கம்பாடி கிராமத்தில் சங்கா் என்பவரின் கடையில் பருப்பு, எண்ணெய்யை 20 முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளனா்.
அதன் அடிப்படையில் செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மேல்வணக்கம்பாடி கிராம கடைக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், கடை உரிமையாளரான சங்கா் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் கடையை மூடி சீல் வைத்தனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image