விழித்திருங்கள்! தனித்திருங்கள்!வீட்டிலிருங்கள்! நிலக்கோட்டை பகுதி கிராம மக்களுக்கு;நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பெ.ராமமூர்த்தி அவர்களின் அன்பான வேண்டுகோள்..!

விழித்திருங்கள்! தனித்திருங்கள்!
வீட்டிலிருங்கள்! நிலக்கோட்டை பகுதி கிராம மக்களுக்கு;
நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பெ.ராமமூர்த்தி அவர்களின் அன்பான வேண்டுகோள்..!

நிலக்கோட்டை மற்றும் கோடாங்கிநாயக்கன்பட்டி கிராம பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 🙏 நிலக்கோட்டை அருகில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் சமய மாநாட்டில் கலந்து கொண்டவர். இவர் இந்த மாநாட்டிற்கு சென்று வந்த பின்பு சிலரிடம் பழகி பேசி இருக்கலாம் கடைகளுக்கு சென்று வந்து இருக்கலாம்… நிலக்கோட்டை காவல்த்துறை எவ்வளவு முயற்சி செய்தாலும் சிலர் இன்னும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுகிறார்கள். இந்த கொரோனா தொற்று உங்களை மட்டும் கொல்லாது உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கொன்று விடும் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309-ஆக அதிகரித்து இந்தியாவில் தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. மராட்டியம் 1-ஆம் இடத்திலும் நம் பக்கத்து மாநிலமாக உள்ள கேரளம் 3 -ஆம் இடத்திலும் உள்ளது ஆகையால் நிலக்கோட்டை சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரையும் இரு கரம்🙏 கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் இந்த கொரோனா தொற்று உங்களை மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தையும் உங்கள் சொந்த பந்தகளையும் உங்கள் நண்பர்களையும் கொன்று விடும். ஆகையால்,

விழித்திருங்கள் ! தனித்திருங்கள் !!
வீட்டிலிருங்கள் !!!

இப்படிக்கு,
பெ.ராமமூர்த்தி
கிராம நிர்வாக அலுவலர்
நிலக்கோட்டை

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image