பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்குட்ப்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் டோக்கன் விநியோகம்

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனாபாதிப்பில் தமிழக மக்களுக்கான நியாயவிலைக் கடைகள் இயங்க உத்தரவு பிறப்பித்தார். இன்று பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்குட்ப்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் துவங்கிவைத்தார்.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி. நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா. நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான குடிமைப்பொருள் வழங்க முதல்கட்டமாக ஆதிதிராவிடர் /பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான குடிமைப்பொருள் பெற வருவாய்துறை கிராம பணியாளர், ஊராட்சி செயலர்கள் வாயிலாக டோக்கன் வழங்கி சிரமமின்றி கூட்டம் இல்லாத வகையில் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்படுத்தப்பட்டது.ஊராட்சியில் உள்ள அனைத்து நியாயவிலை கடை கட்டிடங்கள் மற்றும் அதனை சுற்றி 300 மீட்டருக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி கொண்டு ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்படுகிறது.நியாய விலைக் கடைகளில் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கடைபிடித்து ஆண்கள் /பெண்கள் வரிசையாக தனித்தனியே விலையில்லா நுகர்பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டும் டோக்கன் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வந்து பொருட்களை பெற்றுக் செல்லவேண்டும். ஊராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குடும்பங்களுக்கு கிராம உதவியாளர்/ ஊராட்சி செயலர் மூலம் வீட்டிற்கு பொருட்களை கொண்டு வழங்கிட ஏற்பாடு செய்யப்படும், என ஊராட்சி நிறுவனத்தால் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை,

புனித ரமலான் வாழ்த்துக்கள்..