திருப்புல்லாணியில் தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு இடம் தர மறுத்து வாக்குவாதம் செய்த ஊர்மக்கள்……

இந்தியா முழுவதும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தி வருகிறார்கள். அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் விதமாக தாங்கள் தங்களது இல்லங்களிலேயே தனிமையாக இருக்க அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

14 நாட்கள் கழித்து அவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏதும் இருந்தால் அவர்களை அரசு சார்பில் தனிமைப்படுத்த இடம் தேர்வு செய்ய கீழக்கரை தாசில்தார் வீர ராஜா தலைமையில் திருப்புல்லாணி காவல் சோதனைச்சாவடி ரோடு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருக்கும் அரசின் மாணவர் விடுதியை தேர்வுசெய்ய அப்பகுதிக்கு கீழக்கரை தாசில்தார் தலைமையில் குழுவினர் வந்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் குழப்பம் நிலவியது.

கீழை நியூஸ்காக SKV சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..