உசிலம்பட்டி – கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, பேருந்து நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் பா நீதிபதி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் பொதுமக்கள் எத்தனை பேர் உணவு வாங்க வருகின்றனர் என்றும் சுகாதார நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் இயங்கி வந்த தினசரி காய்கறி கடைகளை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாற்றியமைத்த காய்கறி கடைகளை பார்வையிட்டு கொமிரானா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் காய்கறி கடைகளில் வாங்கும் வரும் கூட்டத்தை பார்வையிட்டார்.

மேலும் நகராட்சி சார்பாக கிருமிநாசினி தெளிவுகளை ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வாறு நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் நகர செயலாளர் பூமா ராஜா மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுந்தரசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image