Home செய்திகள் நிர்வாக தோல்விகளை மறைக்க தப்லீக் ஜமாத் குறிவைக்கப்படுகிறது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் கண்டனம்!

நிர்வாக தோல்விகளை மறைக்க தப்லீக் ஜமாத் குறிவைக்கப்படுகிறது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் கண்டனம்!

by Askar

நிர்வாக தோல்விகளை மறைக்க தப்லீக் ஜமாத் குறிவைக்கப்படுகிறது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் கண்டனம்!

நிஜாமுதீன் மர்கஸிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், டெல்லி மாநில அரசும் ஒரு சில ஊடகங்களும் தப்லீக் ஜமாஅத்தை பலிகடாவாக்குகின்றன என்றும், திட்டமிடப்படாத சுய ஊரடங்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே இந்த பிரச்சினை பூதாகரப்படுத்தப்படுவதாகவும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின் நோக்கம் எதுவாக இருந்தாலும், திட்டமிடாமல் சமூக விலகலை நடைமுறைப்படுத்தியது மோசமான தோல்வியை தழுவியதோடு, இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாக நிஜாமுதீன் மர்கஸ் நிர்வாகம் தனது முன் தீர்மானிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து அதிகாரப்பூர்வ வழிமுறைகளை முழுமையாக பின்பற்றியது. எச்சரிக்கையோ அல்லது அதன் பின்விளைவுகளை குறித்த போதிய நடவடிக்கைகளோ இல்லாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இலட்சக்கணக்கான மக்களுக்கு துயரமாக மாறியது.

இந்தியா முழுவதும், குறிப்பாக அனைத்து முக்கிய நகரங்களிலும், பல்வேறு குடும்பங்களும் தொழிலாளர்களும் சிக்கியுள்ளனர். ஊரடங்கில் டெல்லி மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாகும். இதற்காக மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு இரண்டும் சமமாக பொறுப்பேற்க வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மையமான தப்லீக் மர்கஸ் எதிர்பாராத கட்டுப்பாடுகளால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. மக்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப அனுமதி கோரி அதிகாரிகளிடம் அவர்கள் கோரிய மனுக்கள் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டவுடன் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டிருந்தாலும், எந்தவொரு போக்குவரத்தோ அல்லது தங்குமிட வசதியையோ அரசு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யாததன் விளைவாக மஸ்ஜிதிற்குள் ஜமாத்தின் பிரதிநிதிகளை தங்க வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மர்கஸைக் குறை கூறும் உள்நோக்கத்தோடு ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுவதும், மர்கஸையும் அதன் தலைவர் சஅத் மொளலானா அவர்களையும் அசாதாரண சூழலுக்கு பொறுப்பேற்க சொல்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மர்க்கஸுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு அநீதியானது, அது கைவிடப்பட வேண்டும்.

அரசு அதிகாரிகள் உருவாக்கிய நிலைமைக்காக மர்கஸ் மற்றும் தப்லீக் ஜமாஅத் மீது பழிபோடுவதை கைவிடுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறது. ஊரடங்கில் நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

 இப்படிக்கு

இயக்குநர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு, தேசிய தலைமையகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, புது டெல்லி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!