Home செய்திகள் தப்லீக் ஜமாஅத் மீதான அவதூறு பரப்புரையை உடனே நிறுத்துங்கள்:-அகில இந்தியத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்…

தப்லீக் ஜமாஅத் மீதான அவதூறு பரப்புரையை உடனே நிறுத்துங்கள்:-அகில இந்தியத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்…

by Askar

தப்லீக் ஜமாஅத் மீதான அவதூறு பரப்புரையை உடனே நிறுத்துங்கள்:-அகில இந்தியத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்…

தப்லீக் ஜமாஅத், மர்கஸ் நிஜாமுத்தீன் ஆகியவற்றைக் குறி வைத்து அச்சு ஊடகத்திலும் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற அவதூறு பரப்புரை மனித கேவலத்தின் உச்சமாகும்.

கொரோனா போன்ற மிகப் பெரும் பேரிடரை கேவலமான அரசியல் இலாபங்களுக்காக, மக்களை மதத்தின் அடிப்படையில் கூறு போட்டு பிளவுபடுத்துவதற்காக பயன்படுத்துகின்ற முயற்சி வெட்கங்கெட்ட குற்றமாகும்.

சர்ச்கைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்ற தப்லீக் நிகழ்வுக்கு முன்பும் பின்பும் நாடு முழுவதும் அந்த நிகழ்வைக் காட்டிலும் பெரிய அளவில் ஏராளமான மத ரீதியான, மதத்துக்கு அப்பாற்பட்ட பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் பெரும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தப்லீக் ஜமாஅத்தின் நிகழ்வு மட்டும் விவாதத்துக்குள்ளாகியிருப்பதிலிருந்தே நம்முடைய விவாதங்களும் உரையாடல்களும் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டிருக்கின்றன என்பதற்கு சான்று ஆகும்.

இந்த வெட்கங்கெட்ட பரப்புரை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இதைச் சாக்காக வைத்து மர்கஸ் நிஜாமுத்தீனின் பொறுப்பாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் முதல் தகவல் அறிக்கை பதியப்படுவது சாத்தியமெனில் லாக் டவுன் முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு ஆனந்த விஹாரிலும் பிற இடங்களிலும் இலட்சக்கணக்கான பாட்டாளிகளை அப்பட்டமான நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாக அலைய விட்ட மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும். இதே போன்று செய்திகளில் சொல்லப்பட்டிருப்பது போன்று தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை அனுப்பிய பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடங்கியிருந்த அரசு அதிகாரிகள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும்.

ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த அவதூறு பரப்புரையை நாங்கள் கண்டிக்கின்றோம். நாங்கள் அனைவரும் *தப்லீக் ஜமாஅத்துக்கும் மர்கஸ் நிஜாமுத்தீனுக்கும் ஆதரவாக நிற்கின்றோம்.

கொரோனா தொற்று நோயை எதிர்கொள்கின்ற விதத்தில் தொடக்க நாள்களிலேயே முஸ்லிம் அமைப்புகள், ஜமாஅத்கள், மார்க்க அறிஞர்கள் சார்பாக தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அறிக்கைகள் ஆகியவற்றை அதிகமாக இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

நாடே மிகப் பெரும் பேரிடரைச் சந்தித்து நிற்கின்ற இந்த நாள்களில் தொடக்க நாள் முதல் ஏழைகளின் துயர் துடைக்க, பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக முஸ்லிம் சேவை அமைப்புகள், மன்றங்கள், மாணவர் அமைப்புகள், கழகங்கள் இடைவிடாமல் சாதி, மதம் பாராமல் மேற்கொண்டு வருகின்ற சேவை பற்றிய செய்திகளும் அதிகமாக ஊடங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இது கேவலமான அரசியல் ஆதாயம் தேடப்படுவதற்கான நேரம் இல்லை. மாறாக ஒன்றுபட்டு இந்தப் பேரிடரை எதிர்கொண்டாக வேண்டிய நேரம் என அழுத்தம்திருத்தமாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

-சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அகில இந்தியத் தலைவர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!