144 தடை உத்தரவு காற்றில் பறக்குது… மதிக்காத வியாபாரிகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை, என்ற செய்தியை “கீழை நீயூஸில்” வெளியிட்டோம் இதன் எதிரொலியாகதடை உத்தரவை மீறும் வாகனம் பறிமுதல் செங்கத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை…

144 தடை உத்தரவு காற்றில் பறக்குது… மதிக்காத வியாபாரிகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை, என்ற செய்தியை “கீழை நீயூஸில்” வெளியிட்டோம் இதன் எதிரொலியாக
தடை உத்தரவை மீறும் வாகனம் பறிமுதல் செங்கத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை…

செங்கத்தில் 144 தடை உத்தரவு ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். திருவண்ணாமலை எஸ் பி சிபிசக்கரவர்த்தி கூடுதல் எஸ்பி வனிதா ஆகியோர் செங்கம் வருகை தந்தனர் .அங்கு அமலில் உள்ள 144 தடை உத்தரவை ஆய்வு செய்து சில கடைகளை திறந்து இருப்பதை மூடா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.இதனை தொடர்ந்து அங்கு பைக்கில் சிலர் சுற்றுவதை கண்டு காரணம் கேட்டு அவர்களை விரட்டியதோடு மீண்டும் மீண்டும் பைக்கில் செல்வதை பார்த்தால் பறிமுதல் செய்யப்படும் என்று சிபிச் சக்கரவர்த்தி எச்சரித்தார். செங்கம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிக்கு சென்று கூட்டம் உள்ளதா என கண்காணித்தார். இடைவெளி விட்டு நின்று காய்கறி வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் இந்த ஆய்வின்போது தாசில்தார் பார்த்தசாரதி டிஎஸ்பி சின்னராஜ் காவல்துறை ஆய்வாளர் சாலமன் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image