Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விழிப்புணர்வு ஒழுங்கு பணிகளில் ஈடுபட்ட கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தன்னார்வலர்கள்… பொதுமக்கள் வெகுவாக பாராட்டு..

விழிப்புணர்வு ஒழுங்கு பணிகளில் ஈடுபட்ட கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தன்னார்வலர்கள்… பொதுமக்கள் வெகுவாக பாராட்டு..

by ஆசிரியர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் காய்கறி கடைகளில் மக்கள் மொத்தமாக நின்று வாங்காமல் இருக்க கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்கப்பட்டு தனிதனியாக நின்று வாங்க வசதியாக இடைவெளி கோடு அமைக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் இடைவெளி கோடுகளில் நின்று வாங்காமல் எப்போதும் போன்று மொத்தமாக நின்று வாங்குவதாக விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து இன்று (31/03/2020) காலை 6மணி முதல் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னார்வளர்கள் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க வந்த அனைவருக்கும் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளும் விதத்தில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தபடுத்திய பிறகே காய்கறி வாங்க உள்ளே அனுமதித்தார்கள்.

மேலும் காய்கறி வாங்கிவிட்டு வெளியே செல்பவர்களின் கைகளை சுத்தம் செய்த பிறகே வெளியே செல்ல அனுமதித்தார்கள். கைகளை சுத்தபடுத்தும் இப்பணியில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி சென்றார்கள். மேலும் காய்கறி வாங்க வந்தவர்களை வரிசையில் நின்று வாங்கி செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தும் வரிசையில் நின்று வாங்கும் விதத்தில் பொதுமக்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!