உசிலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட பூ சந்தை ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

உசிலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட பூ சந்தை ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது, வியாபாரிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பூக்களை விற்பனை செய்தனர்.தமிழகமெங்கும் 144 தடை உத்தரவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ சந்தையில்; ஊரடங்கு உத்தரவால் பூக்கள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு இருந்தது.இதனால் பூ விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மீண்டும் பூசந்தை செயல்பட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து அதிகாரிகள் மீணடும் பூசந்தை சில நிபந்தனையுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளனர்.இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டு இருந்த பூ சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதில் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டே சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவராக வரிசையாக வந்து பூக்களை விற்பனை செய்தனர். பூ வியாபாரிகளும் முக கவசம் அணிந்து கொண்டே விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்தனர். ஆனால் மல்லிகைப்பூவை விவசாயிகளிடமிருந்து சென்டு கம்பெனிக்காக 1கிலோ ரூ50க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மல்லிகைப்பூவிற்கு போதிய விலை நிர்ணயம் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image