தமிழக வருவாய்,பேரிடர் மேலாண், தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களுக்கு விடுத்த வேண்டுகோள்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை சகோதர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.இன்றைக்கு 130 உலக நாடுகளை உலுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு போர் கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ முதல்வரும் தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பலியாகி விடக்கூடாது என இரவு, பகல் பாராமல் அயராது கடுமையாக உழைத்து வருகிறார்.
மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தினமும் ஆய்வு செய்து அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
முதல்வர் வெளியிடும் அறிக்கைகளை ஊடகம், பத்திரிகை துறையினர் சிறப்பாக வெளியிட்டு மக்களை காக்கும் புனித பணியில் நீங்கள் ஈடுபட்டு இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வரும் உங்கள் பணி மிகவும் இன்றியமையாதது. இப்புனித பணியை மேற்கொள்ளும்போது நீங்கள் முக கவசம், கை உறை, சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். பணி முடிந்து வீடு திரும்பும் நீங்கள் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில் மக்களை காக்கும் இப்புனிதப் பணியில் நீங்களும், உங்களை காத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுவே, தமிழக முதல்வரின் எண்ணம். பத்திரிகை நண்பர்களே மக்கள் பணியில் ஈடுபடும் நீங்களும் உங்களை காத்துக் கொள்ள வேண்டும் என உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை விடுகிறேன் என கூறியுள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply