ராமநாதபுரத்தில் தீயணைப்பு துறை மூலம் கிருமி நாசினி தெளிப்பு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு

இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் கலந்து கிருமி நாசினி பீச்சியடிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:வைரஸ் பரவலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பொது மக்களுக்கு அத்தியாவசியதேவையான பால், உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்து பொருட்கள் சிரமமின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்கிச் செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பியோர் மற்றும் அவர்களது குடும்பத்தார் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வீட்டிலிருந்து வெளியே செல்லாமலிருக்க காவல், சுகாதாரம், வருவாய் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் பொது இடங்களில் தண்ணீரில் கலந்த கிருமி நாசினி ஒரு நாளைக்கு இரு முறை தெளிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்படா வகையில் சுகாதாரம் பேணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, தாசில்தார் வி.முருகவேல், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply