மத்திய, மாநில அரசுகளுக்கும்,  “மக்கள் நீதி மய்யம்” தலைவர் கமல்ஹாசன்  அவர்களுக்கும் பால் முகவர்கள் சங்கம் நன்றி”

“மத்திய, மாநில அரசுகளுக்கும்,  “மக்கள் நீதி மய்யம்” தலைவர் கமல்ஹாசன்  அவர்களுக்கும் பால் முகவர்கள் சங்கம் நன்றி”

உலகம் முழுவதும் கொள்ளை நோயாக மாறி வரும் கொரானாவில் இருந்து மக்களை காத்திட கடந்த 25ம் தேதி முதல் 21நாட்களுக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசு 144தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கட்டுமான, சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தினக்கூலி அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணியாளர்கள், சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வணிகர்கள் என பல லட்சம் உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இழப்பீடுகள் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறியை உணவாக கொடுத்தது போலிருந்தாலும் கூட அவர்களை ஒரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

மேலும் 21நாட்கள் 144தடை உத்தரவு அமுலில் இருப்பதால் வீட்டுக்கடன், கல்விக் கடன், வாகனகடன், தொழில் கடன் என வங்கிகளில் பெறப்பட்ட பல்வேறு கடன்கள் மீதான மாதாந்திர தவணை தொகையை வரும் 3மாத காலத்திற்கு வசூலிக்க தமிழக அரசும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் தடை விதித்திருப்பது தினக்கூலி தொழிலாளர்களையும், நடுத்தர, அடித்தட்டு மக்களையும் சற்றே நிம்மதி கொள்ளச் செய்துள்ளது.

இந்த நேரத்தில் உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் மீது அக்கறை கொண்டு உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைக்குரலாக முதன் முதலாக ஓங்கி ஒலித்த “மக்கள் நீதி மய்யம்”கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும்,திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவண செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  அவர்களுக்கும், பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..