கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் தமிழக எம்பிக்கள்.?

கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் தமிழக எம்பிக்கள்.?

மக்களவை எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அவரவர் தொகுதிகளுக்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி வரை மத்திய அரசு நிதி ஒதுக்கும்.

எம்பி-க்கள், இந்த நிதியை தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், எந்த ஒரு நிறுவனத்திற்கும் அதிகப்பட்சம் ரூ.50 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், எந்த ஒரு உபகரணங்கள் வாங்குவதற்கும் அதன் மொத்த செலவினத்தில் 10 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் போன்ற நிதி பயன்பாடு கட்டுப்பாடுகளை எம்பிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று மாலை எம்பிகள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மொத்த நிதியையும் வழங்குவதற்கு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு கட்டுப்பாடு விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளியிடப்பட்ட மறுநாளே தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரானோ வைரஸ் நோயை கட்டுப்படுத்த தங்களது தொகுதி நிதியை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் மூலம் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

இதை தமிழக மீடியாக்கள்,ஏதோ தமிழக எம்பிக்கள் தங்கள் சொந்த பணத்தை தருவது போல விளம்பரம் செய்து வருகின்றன.மக்கள் பணத்தை,மக்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.இதில் எதற்கு விளம்பரம்?

மத்திய அரசு இவர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும்,இந்த இக்காட்டான சூழலில் மக்களின் உயிர்காக்க பயன்படுத்தி கொள்ள வேண்டியதுதானே..?இதில் இவர்கள் என்னமோ சொந்த பணத்தை தருவதுபோல் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதை தடுக்கலாமே..?

இந்தியாவில் வேறு எந்த மாநில எம்பிக்களும் இப்படி விளம்பம் செய்து கொள்ளவதில்லை.கொரானோ வைரஸ் தடுப்புக்கு தன் சொந்த பணத்தை கொடுத்த தமிழக எம்பிக்கள் எத்தனை பேர்..?

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply