செங்கம் அருகே வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் .கிராம மக்கள் கோரிக்கை..

செங்கம் அருகே வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் .கிராம மக்கள் கோரிக்கை..

செங்கம் அருகே மும்பை, கொல்கத்தா, நாசிக் பகுதிகளிலிருந்து லாரி, டூவீலர்களில் வந்தவர்களை பார்த்து கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர் .அவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புரச பட்டு வணக்கம்பாடி புளியம்பட்டி, ஆண்டிப்பட்டி, மணிக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மும்பை கேரளா பெங்களூர் மைசூர் ஷிமோகா ஆகிய பகுதிகளுக்கு என்று பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கம் பகுதியை சார்ந்த தொழிலாளர்களை அந்தப் பகுதி இருக்கக்கூடாது என்று சொந்த ஊருக்கு சென்று வைரஸ் தாக்கம் கருத்தாக்கம் குறைந்த பின்னர் வேலைக்கு வரும்படி அப்பகுதியினர் கூறிவிட்ட நிலையில், இதையடுத்து அந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக சிலர் இரவு நேரத்தில் லாரியில் ஏறி கொண்டு செங்கம் பகுதியில் உள்ள சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களை பார்த்ததும் கிராம மக்கள் சொந்த கிராமத்தினர் என்றாலும் வைரஸ் தாக்கம் வெளியூர்களிலிருந்து வந்துள்ளார்கள் இவர்களுக்கான தாக்கம் இருக்கும் என பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், செங்கம் சுகாதாரத் துறையினர் மற்றும் அதிகாரிகள் வெளிமாநிலத்தில் வந்துள்ள இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply