கிராம இளைஞர்களின் கொரோனா தடுப்பு பணி-கிராம எல்லையை பாதுகாத்து வரும் இளைஞர் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு..

கிராம இளைஞர்களின் கொரோனா தடுப்பு பணி-கிராம எல்லையை பாதுகாத்து வரும் இளைஞர் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு…

தன்னூத்து கிராமத்தில் கொரோனாவிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் பணியில் இளைஞர் குழுவினர் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தன்னூத்து கிராமம் உள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அந்த ஊர் இளைஞர்கள் 30பேர் குழுவாக சேர்ந்து தங்களுக்குள்ளே கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி, அந்த ஊருக்கு செல்ல 3 பாதைகள் உள்ளன. அதில் 2 பாதைகளின் எல்லைகளில் அறிவிப்புடன் கூடிய தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். ஒரு எல்லையை மட்டும் திறந்து வைத்துள்ளனர்.

அங்கு கை கழுவதற்கு சோப்பு, தண்ணீர் வசதியும் செய்துள்ளனர்.ஷிப்டு முறைகளாக 3 பேர் வீதம் மாறி மாறி எல்லையில் காவல் காத்து வருகிறார்கள்.

ஊரில் இருந்து வெளியே செல்பவர்களை விசாரித்து அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி அனுமதிக்கின்றனர். அன்னிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் வருவதாக இருந்தால் விசாரிக்கின்றனர்.

மிக முக்கியமாக செல்ல வேண்டி இருந்தால், அவர்களுக்கு சோப்பு, தண்ணீர் கொடுத்து கைகளை கழுவ வைத்து உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் தங்கள் ஊரில் இருந்து வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருவோரையும் கைகளை சோப்பு போட்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.

இளைஞர்களின் இந்த செயலை அந்த பகுதி பொது மக்கள் பாராட்டி உள்ளனர். அருகில் உள்ள பிற கிராமங்களிலும் இதனை செய்ய தொடங்கி உள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..